பல்லவன் உள்ளிட்ட ரயில் சேவை சென்னை -தாம்பரம் இடையே 10ந்தேதி ரத்து
பல்லவன் உள்ளிட்ட ரயில் சேவை சென்னை -தாம்பரம் இடையே 10ந்தேதி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் சென்னை -தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை, குண்டக்கல் மண்டலங்களில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை -காரைக்குடி -சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12605 ,12606 )வருகிற 10-ஆம் தேதி தாம்பரம் -சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை -மதுரை -சென்னை இடையே இயங்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் (12635 ,12636 )வருகிற 10-ஆம் தேதி சென்னை- தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை- மன்னார்குடி இடையே இயங்கும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16179 )வருகிற 11 ,12 ,13-ஆம் தேதிகளில் சென்னை -தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது/
சென்னை -மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் (16159 )வருகிற 11 ,12 ,13-ம் தேதிகளில் சென்னை -தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது/ சென்னை திருச்சி இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12653 )வருகிற 11 ,12 ,13-ஆம் தேதிகளில் சென்னை- தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது/
திருப்பதி -விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16853 ,16 854 )வருகிற 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை காட்பாடி- திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கௌராவிலிருந்து திருச்சி வரை செல்லும் கௌரா எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற எட்டாம் தேதி கெளராவிலிருந்து ரெண்டு மணி நேரம் தாமதமாக இரவு 7:40 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.