திருச்சி மாவட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை 22 லட்சத்து 91 ஆயிரத்து 890

புதிய பட்டியல் படி திருச்சி மாவட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை 22 லட்சத்து 91 ஆயிரத்து 890 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-01-22 14:12 GMT

திருச்சி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (22.01.2024) மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2024 - ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இச்சுருக்க முறை திருத்தம் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2024 இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னலையில் வெளியிடப்பட்டது.

அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். இன்று (22.01.2024) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும்சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட விபரம் பின்வருமாறு:

வ. எண்,  சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயர், படிவம் - 6 படிவம் - 7

வரப்பெற்ற மனுக்கள்,  ஏற்கப்பட்ட மனுக்கள்,  நிராகரிக்கப் பட்ட மனுக்கள் விவரம் வரிசையாக பதிவிடப்பட்டுள்ளது.

1 138-மணப்பாறை 6611 6339 272 2143 1883 260

2 139-ஸ்ரீரங்கம் 8395 7986 409 3118 2574 544

3 140-திருச்சிராப்பள்ளி மேற்கு 5830 5715 115 3282 2746 536

4 141-திருச்சிராப்பள்ளி கிழக்கு 5127 4915 212 3129 2646 483

5 142-திருவெறும்பூர்; 6737 6522 215 5070 4755 315

6 143-இலால்குடி 5567 5380 187 2292 2175 117

7 144-மணச்சநல்லூர்; 5261 5188 73 2698 2199 499

8 145-முசிறி 4605 4434 171 1826 1654 172

9 146-துறையூர்(தனி) 4433 4270 163 1538 1396 142

மொத்தம் 52566 50749 1817 25096 22028 3068

சட்டமன்ற தொகுதிவாரியாக ஆண் பெண் வாக்காளர்கள் விபரம்: வ. எண் சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயர் 27.10.2023 அன்றைய நிலையில் வாக்காளர்கள் விபரம் 27.10.2023 -இல் இருந்து சுருக்கமுறை திருத்தம் மற்றும் தொடர் திருத்தங்களின் போது பெறப்பட்ட மனுக்களின் பேரில் 22.01.2024 நாளில் வாக்காளர்கள் விபரம் வரிசையாக பதிவிடப்பட்டு உள்ளது.

1 138-மணப்பாறை 134663 139058 13 273734 136691 141486 13 278190

2 139-ஸ்ரீரங்கம் 145107 154343 46 299496 147549 157312 47 304908

3 140- திருச்சிராப்பள்ளி மேற்கு 129350 139305 33 268688 130640 140984 33 271657

4 141- திருச்சிராப்பள்ளி கிழக்கு 121675 129593 63 251331 122720 130817 63 253600

5 142-திருவெறும்பூர் 130372 135797 61 266230 131023 136914 60 267997

6 143-இலால்குடி 104644 111738 19 216401 106034 113551 21 219606

7 144-மணச்சநல்லூர் 120029 129236 46 249311 121391 130866 43 252300

8 145-முசிறி 106524 111735 21 218280 107797 113241 22 221060

9 146-துறையூர்(தனி) 106395 113276 27 219698 107728 114814 30 222572

மொத்தம் 1098759 1164081 329 2263169 1111573 1179985 332 2291890

இந்த பட்டியலின் படி திருச்சி மாவட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 91 ஆயிரத்து 890 ஆக உள்ளது.

அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி - 139, ஸ்ரீரங்கம், குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி 143, இலால்குடி ஆகும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 27.10.2023 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2547 ஆகும். மேற்படி பட்டியலின்படி, சுருக்கமுறை திருத்தங்களின் போது வாக்காளர் பட்டியலில்  50749 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும்  சுருக்கமுறை திருத்தங்கள் பணி மேற்கொண்டு மொத்தம் 22028 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 05.01.2023 முதல் நாளது தேதிவரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 49761 புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு வரப்பெற்று கணினியில் விபரங்களை பதிவேற்றம் செய்து அஞ்சல்துறை மூலமாக சம்மந்தப்பட்ட வாக்காளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கு முன்பாக வரப்பெறும் விண்ணப்பங்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அஞ்சல் துறை மூலமாக வாக்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் பத்து தினங்களுக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர்நீக்கம் செய்திட விண்ணப்பம் செய்யலாம். மேலும் பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் கடைசி நாளிலிருந்து பத்து நாளுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை வாக்காளர்கள் அளிக்கலாம்.

எனவே வாக்காளர் பட்டியலில் விடுபட்ட இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பங்களை அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகள் ஏதுமிருப்பின் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரிடம் எதிர்வரும் 31.01.2024 - க்குள் விண்ணப்பம் அளித்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறினார்.

Tags:    

Similar News