திருச்சியில் தக்காளி விலை குறைந்தது- ஒரு கிலோ ரூ.60 -க்கு விற்பனை

திருச்சியில் தக்காளி விலை குறைந்துள்ளது. காந்தி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு இன்று விற்கப்பட்டது.;

Update: 2021-11-25 08:39 GMT

திருச்சி காந்தி சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஏறிக்கொண்டே சென்றது. அதிக பட்சமாக ஒரு கிலோ  தக்காளி ரூ.130 வரை  விற்கப்பட்டு வந்தது. தக்காளி விலை தங்கத்திற்கு நிகராக போய்விடுமோ என மக்கள் அச்சத்தில் இருந்த சூழலில் திருச்சியில் இன்று தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது.

இந்த விலை குறைவு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 80-ம். அதில் இருந்து இன்று 20 ரூபாய் குறைந்து  திருச்சி காந்தி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனையானது.  நாளை மகராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்வதால் இன்னும் விலை குறையலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News