புகையிலை பொருட்கள் விற்பனை செய்த திருச்சி புத்தக கடைக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த திருச்சி புத்தக கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.;

Update: 2021-12-27 15:20 GMT
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள ஒரு புத்தக கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள்  சோதனை நடத்தினர். கடந்த 10ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 128  கிலோ பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த கடையில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டு வந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கடைக்கு போலீஸ் பாதுகாப்புடன்சென்றனர். பின்னர் அந்த கடையை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News