தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுத் தேர்தல் திருச்சியில் நடைபெற்றது.

Update: 2021-10-17 07:45 GMT

திருச்சியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திருச்சியில்  நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் இன்று  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் மாநிலத் தலைவராக முன்னாள் மாநிலப்பொருளாளர் அழகிரிசாமி, மாநிலப் பொதுச் செயலாளராக மோகனரங்கன்,மாநில பொருளாளராக நாமக்கல் மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர்களாக செந்தில்நாதன்,  மற்றும்மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் குபேந்திரன் ஆகியோரும், மாநில தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் வடக்கு மண்டல செயலாளர் செந்தில்குமார், மாநில அமைப்புச் செயலாளராக விருதுநகர் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன்,வடக்கு மண்டல செயலாளராக பண்ருட்டி வட்ட செயலாளர் பக்கிரிசாமி,

மத்திய மண்டல செயலாளராக முன்னாள் மத்திய மண்டல செயலாளர் வாசுதேவன், மேற்கு மண்டல செயலாளராக முன்னாள் மாநில துணைத்தலைவர் சுரேஷ், தெற்கு மண்டல செயலாளராக தென்காசி மாவட்ட செயலாளர் சின்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.மேலும்மாநில பிரச்சார செயலாளராக பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மாநில பொதுத்தேர்தலை புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட்டு தேர்தல் ஆணையாளர்கள் நியமனம் செய்து தேர்தல் இந்த தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், இந்த தேர்தலை நடத்திட முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறையினருக்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வாக்களித்த மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தலை சிறப்பாக ஏற்பாடு செய்ய தங்களது பங்களிப்பைச் செய்த முன்னாள், இந்நாள், மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News