திருச்சியில் தியாகி அருணாசலம் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு

திருச்சியில் தியாகி அருணாசலம் சிலைக்கு அவரது பிறந்த நாளையொட்டி காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;

Update: 2021-12-15 11:49 GMT

திருச்சியில் தியாகி அருணாசலம் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சுதந்திர போராட்ட தியாகி திருச்சி அருணாசலம் பிள்ளையின் 111வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம். சரவணன் தலைமையில் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்திலிருந்து காங்கிரசார்  ஊர்வலமாக சென்று காமராஜர் வளைவில் உள்ள தியாகி அருணாசலம் பிள்ளை உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அதன்பின் அருணாசல மன்றத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாநில பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி, ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் சந்திரன்,முன்னாள் மாவட்ட தலைவர்  தொட்டியம் சரவணன், மாவட்ட துணைத்தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் ,சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ,செந்தில்குமார், கள்ளிக்குடி குமார், நாச்சிகுறிச்சி அருண் பிரசாத், பால் குமார், மலைக்கோட்டை மகேஷ் கங்கானி, மலைக்கோட்டை ஜி முரளி , சிறுபான்மைப் பிரிவு பஜார்மைதீன், தியாகி அருணாச்சலத்தின் பேரனும் கலைப்பிரிவு திருச்சி மாவட்ட தலைவருமான ராகவேந்திரா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News