திருச்சி மலைக்கோட்டை கோவில் மாணிக்க விநாயகர் மரத்தேர் வெள்ளோட்டம்

திருச்சி மலைக்கோட்டை கோவில் மாணிக்க விநாயகர் மரத்தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.

Update: 2023-11-23 17:44 GMT

திருச்சி மலைக்கோட்டை கோவில் மாணிக்க விநாயகர் மரத்தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தனர்.

திருச்சியின் அடையாளமாக விளங்குவது மலைக்கோட்டை. மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரும், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்கள்.

மாணிக்க விநாயகருக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட 8 லட்ச ரூபாய் மதிப்பிலான, தேக்கு மரத்திலான தேரினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி கோட்ட தலைவரும்,தி.மு.க. மாநகரச் செயலாளருமான மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு அதன் புறப்பாட்டினை இன்று தொடங்கி வைத்தனர். உற்சவர் மண்டபத்தில் தொடங்கி வைத்து,தேரினை மாணிக்க விநாயகர் சன்னதியை சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலைநிறுத்தினர்.

முன்னதாக மாணிக்கவிநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர்கள் முன்னிலையில்மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலின் பெண் ஓதுவார் ரூபாவதி மாணிக்க விநாயகர் பாடலை பாடினார். உற்சவ காலங்களில் பக்தர்கள்ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இத்தேரினை இழுக்கலாம் என கோவிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News