வெறிநாய் தொல்லை கண்டித்து திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் முற்றுகை
வெறிநாய் தொல்லை கண்டித்து திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
திருச்சி திருவெறும்பூர் பாய்லர் ஆலை ஊழியர் குடியிருப்பில் தொடர்ச்சியாக, நாய், மாடு தொல்லைகளினால், தொடர்ந்து தொழிலாளர்களும், அவர்தம் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து நாய், மாடு, குதிரை போன்றவற்றை ஊரகபகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும் என, தொழிற்சங்கம் சார்பாக, பெல் நிர்வாகம், தாசில்தார் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரிடமும், மனுக்கள் கொடுத்து, கோரிக்கை வைக்கப்பட்டது.
இருந்தபோதிலும், இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.பெல் ஊரகப் பகுதியில், தொழிலாளர்களின் இரண்டு குழந்தைகளையும் ஒரு தொழிலாளியையும் நாய் கடித்ததில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனஙை
இதனை கண்டிக்கும் வகையில் AITUC சங்கத்தின் சார்பில், இன்று மதியம் 2 மணி அளவில்,திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் விளைவாக தாசில்தாருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வருகிற செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் (துவாக்குடி நகராட்சி, கூத்தைப்பார் பேரூராட்சி, நவல்பட்டு ஊராட்சி, கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி) அரசு அதிகாரிகள் மற்றும் பெல் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள், நமது சங்க நிர்வாகிகள் அடங்கிய கூட்டுக் கூட்டத்தை நடத்தி அதில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முடிவுகள் எட்டப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.