திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசருக்கு கொரோனா

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-01-10 00:59 GMT
திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசருக்கு கொரோனா

திருநாவுக்கரசர் எம்.பி.

  • whatsapp icon

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் திருநாவுக்கரசர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதன் காரணமாக அவர் தனது உடல் நிலை பற்றி பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து திருநாவுக்கரசர் எம்.பி. டாக்டர்களின் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே தன்னுடன்  தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News