திருச்சி கோட்டை பகுதியில் வீட்டு முன் நிறுத்தி இருந்த மினிபஸ் திருட்டு

திருச்சி கோட்டை பகுதியில் வீட்டு முன் நிறுத்தி இருந்த மினிபஸ் திருட்டு போனது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-02-15 16:13 GMT

திருட்டு போன மினி பஸ்.

திருச்சி சிந்தாமணி ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 59) இவர் மினிபஸ் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி பாலசுப்ரமணியன் என்பவரிடம் ஒரு மினி பஸ்சை ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும் பின்னர் அதை பழுது பார்த்து தனது வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மினி பஸ்சை காணவில்லை என கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் மீது கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் காணாமல் போன மினி பஸ் கும்பகோணம் அருகே இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று, மினி பஸ்சை திருடிச் சென்ற மயிலாடுதுறை அருகே சீர்காழி தில்லை விடங்கன் திட்டை பகுதியிலுள்ள முருகன் கோவிலை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 30). என்பவரை கைது செய்து,  மினி பஸ்ஸை கைப்பற்றி இன்று மாலை காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் மினி பஸ்சை திருடி சென்ற வழக்கில் பாலசுப்பிரமணியன், பாலு ஆகிய 2 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருட்டு போன பஸ்சின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News