திருச்சி நகரில் ஜூன் 1-ம் தேதி முதல் நெகிழி பொருட்கள் பயன்படுத்த தடை

திருச்சி நகரில் ஜூன் 1-ம் தேதி முதல் நெகிழி பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2022-05-27 17:16 GMT

தமிழக அரசின் ஆணைக்கு இணங்க திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் நெகிழிப்பொருட்கள் (Plastic) பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேயர் மு அன்பழகன் தலைமையில் வணிகர் சங்கங்கள், உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் நெகிழிப்பொருட்களை விற்பனை செய்பவர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் 18.05.2022 அன்று நடைபெற்றது.

இதில் நெகிழிப்பொருட்கள் பயன்படுத்துவதை 100% தடுக்கும் பொருட்டு மாற்று பொருட்கள் உபயோகபடுத்த வேண்டும் என்றும், வரும் 31.05.2022 தேதிக்குள் வியாபாரிகள் நெகிழிப்பொருட்கள் (Plastic) விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும் எனவும், மஞ்சபை, பேப்பர் கவர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், அறிவுரைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில்  துணைமேயர், வார்டுக்குழு தலைவர்கள், மாநகர்நல அலுவலர் மற்றும் சுகாதார பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

வரும் 01.06.2022 தேதி முதல் நெகிழிப்பொருட்கள் (Carry bag, Cup, Plastic Paper) பயன்படுத்துவதை 100% தவிர்க்க வேண்டும் எனவும்,மீறி யாராவது பயன்படுத்தினால் கள ஆய்வு செய்து பறிமுதல் செய்வதோடு, அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News