சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.;
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருச்சி பீமா நகர் புது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 52 ).இவர் கடந்த 28- 11 -2019 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை கலர் பென்சில் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமையிடம் பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரியின் அடிப்படையில் கணேசனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மறுநாளே கைது செய்தனர். மேலும் அவர் மீது 7 -12 -2020 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை திருச்சி மகிளா நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கணேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் மிதித்து நீதிபதி ஸ்ரீ வத்சன் தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அருட்செல்வி ஆஜராகி வாதாடினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அருள்ஜோதிக்கு மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா பாராட்டு தெரிவித்தார்.