வருகிற 28-ம் தேதி திருச்சி மாநகராட்சியின் முதல் கூட்டம்
வருகிற 28ம் தேதி திருச்சி மாநகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
திருச்சி மாநகராட்சியின் மேயராக மு. அன்பழகன் கடந்த 4ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.28 ஆண்டுகால திருச்சி மாநகராட்சி வரலாற்றில் தி.மு.க. மேயர் பதவி ஏற்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் திருச்சி மாநகராட்சி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததால் தி.மு.க. மேயர் அந்த பதவிக்கு வர முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி திருச்சி உள்பட 21 மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் தி.முக.வே நேரடியாக களம் இறங்கியது.21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.
திருச்சி மாநகராட்சியின் முதல் ஆண் மேயர் என்ற பெருமையும் அன்பழகனுக்கு உண்டு. அன்பழகன் பதவி ஏற்றதும் கடந்த திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து வார்டு வாரியாக ஆய்வு பணிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருச்சி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் வருகிற 28-ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான அஜெண்டா 65 மன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 28-ம்தேதி காலை 10.30 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.