திருச்சியில் பத்தாம் வகுப்பு மாணவி திடீர் மாயம்
திருச்சியில் திடீர் காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவியை போலீசர் தேடி வருகின்றனர்.;
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் கோகில வாணி (வயது 16). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற கோகிலவாணி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் கோகிலவாணி கிடைக்காததால், அவரது தாய் வனிதா பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து மாயமான கோகிலவாணியை தேடி வருகிறார்.