திருச்சி தென்னூர் உழவர் சந்தை குப்பைகளை அப்புறப்படுத்த கோரிக்கை
திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் மலை போல் குவிந்துகிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த திருச்சி தென்னூர் அண்ணா நகர், உழவர் சந்தை இன்று மிகுந்த சுகாதாரக் கேட்டிற்கு வழிவகை செய்யுமளவில் மாறி வருகிறது. பெருமளவில் குப்பைகள் சேர்ந்து சந்தைப் பகுதி ஒரு குப்பைமேடாக காட்சியளிக்கிறது.
துப்புரவு பணியாளர்கள் முறையாக சுத்தம் செய்ய வருவது இல்லை. அப்பகுதியை தூய்மைபணியாளர்களின் மேற்பார்வையாளர்களும் கண்டுகொள்வதில்லை. பலமுறை புகார் செய்தும் பலனில்லை என்று அங்குள்ள வியாபாரிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இனிவரும் பண்டிகை காலங்களில் பெருமளவு மக்கள் காய்கறிகள் வாங்க இப்பகுதிக்கு வார வாய்ப்புள்ளது. ஏற்கனவே கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் இப்பகுதியை முறையாக சுத்தம் செய்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் தெரிவித்தனர்.
எனவே மாநகராட்சி ஆணையர் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சந்துரு என்கிற சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.