மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சி செந்தண்ணீர்புரம் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
இந்தியா முழுவதும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி தலைமையில், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் கே.சி. நீலமேகம், வெ.இரா.சந்திரசேகர் முன்னிலையில் இந்த விழா நடந்தது.
பத்து ஆண்டுகளாக 10 ம்வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற பாடுபட்ட ஆசிரியர்களை பாராட்டி புத்தகம் கொடுத்ததுடன், ஜமால் முகமது கல்லூரி தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர் அமிருதீன் "நம்பிக்கையில் வெற்றி" என்ற தலைப்பில் : நம்மிடம் எல்லாத் திறமைகளும் இருக்கின்றன என்கிற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
அந்தத் திறமைகள் அனைத்தும் நம்மை வெற்றியின் பாதையில் பயணிக்கச் செய்யும் என்கிற நம்பிக்கையும் வேண்டும். நம்பிக்கையை விடவே கூடாது! நம்பிக்கையை கைவிட்டுவிட்டால் நாம் சராசரி மனிதனைவிடச் சாதாரண மனிதனாகிவிடுவோம். நம்பிக்கை இழந்த மனம், நம்மை அதளபாதாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். வாழ்க்கையில் வெற்றிபெற நம்பிக்கையும் அவசியம். நம்பிக்கையை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, நாம் நம் மீது வைக்கும் நம்பிக்கை. இரண்டு, நாம் பிறர் மீது வைக்கும் நம்பிக்கை. இவை இரண்டுமே சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
நம்பிக்கை இரண்டு வகை என்று சொன்னேன். நம் மீது நமக்கு முழு நம்பிக்கை வேண்டும். ஒரு செயலை நம்மால் முடிக்க முடியும் என்று முழுமூச்சோடு செயலில் இறங்கிப் பாருங்கள். வெற்றி நிச்சயம் என பேசினார்.
மேலும் நாடகம், பாட்டு முலம் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ வரவேற்றார். ஆங்கில ஆசிரியர் நர்மதா நன்றி உரையாற்றினார்.
ஆசிரியர்கள் அருணா, விக்டோரியா, மரினா, ரீனா, ராணி, மெச்சா ராணி, ஜெயந்தி, சந்திராதேவி, மகேஸ்வரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .