கருப்பு சட்டை அணிந்து டாஸ்மாக் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கருப்பு சட்டை அணிந்து டாஸ்மாக் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-25 11:23 GMT

திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தலைமையில்  கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

டாஸ்மாக் நிர்வாக நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், தொழிலாளர் சட்டப்படி 450 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும், மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணி புரிந்து வருபவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், 21-2-2022அன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பொதுமேலாளர் (நிர்வாகம்) தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது உறுதி அளிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News