தமிழகத்தின் முதல் செந்தூர மரம் திருச்சி கல்லுக்குழியில் இன்று நடப்பட்டது
தமிழகத்தின் முதல் செந்தூர மரம் திருச்சி கல்லுக்குழியில் இன்று நடப்பட்டது;
செந்தூர மரம் வட இந்தியாவில் மற்றும் உள்ளது . தமிழகத்தில் செந்தூர மரம் இல்லை .இதை உணர்ந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை , செயலர் ஆக பணியாற்றி வரும் டாக்டர் சி.ஆர்.பிரசன்னா இ.ஆ.ப. வின் தீவிர முயற்சியால் விதைகள் மூலம் தமிழகத்தில் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு , சார்பில் தமிழகத்தில் முதல் செந்தூர மரம் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் திருச்சி இரயில்வே காலனியில் உள்ள கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் .எம்.பிரதீப் குமார் செந்தூர மரத்தை அறிமுகப்படுத்தி நட்டு வைத்தார்.
மேலும் திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் முனைவர் இரா .கிருஷ்ணசாமியிடம் சில செந்தூர மரக்கன்றுகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார் . அவர் அதனை பெருமாள் கோயில்களில் நட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியிற்கு மரம். பி.தாமஸ், தண்ணீர் .கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், நிர்வாகக்குமு ஆர்.கே.ராஜா, எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சிக்குமு முகிலன் , ஸ்ரீரங்கம் ராஜு, ஆர்.ஸ்ரீதேவி, தா. லூர்துமேரி , பத்மஸ்ரீ கிராமாலயா தாமோதரன், விஐயகுமார், மகேந்திரன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கேசவன் , அறநிலைய துறை மண்டல துணை ஆணையர் சி. செல்வராஜ், மற்றும் செயல் அலுவலர் பா.சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.