தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்க அலுவலகம் திறப்பு

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்க அலுவலகம் திறப்பு விழா திருச்சியில் நடைபெற்றது.

Update: 2023-08-02 16:56 GMT

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்க அலுவலக திறப்பு விழாவில் மாநில தலைவர் அருள்ஜோஸ் பேசினார்.

திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் தலைமையிட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் மற்றும் மாநில தலைவராக ப. அருள்ஜோஸ் உள்ளார்.

இந்த சங்கத்திற்கு திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூலத்திற்கு மேற்கில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க கட்டிடத்தின் அறை எண் 2ல்  மாவட்ட தலைமையிட புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு மாநில தலைவர் அருள்ஜோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட கருவூல அதிகாரி ஜி. பாபு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) பிரசன்னா அலுவலக கணினியை இயக்கிவைத்து வாழ்த்தி பேசினார்.

மேலும் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்கள் ஆர்தர் காட்வின், மணி, முசிறி வட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் மாநில தலைவர் அருள் ஜோஸ், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

விழாவில் மாவட்ட துணை தலைவர் பழனியாண்டி, மாவட்ட இணை செயலாளர்கள்  ஆஜிரா, தங்கவேல், வட்ட தலைவர்கள் ஸ்டீபன்அல்போன்ஸ், தாமஸ், ரவிகுமார் அந்தோணிசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த  அனைவரும் மகாத்மா காந்தி, ஓய்வூதியர்களின் தந்தை என போற்றப்படும் டி.எஸ். நகரா ஆகியோரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

தொடக்கத்தில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News