திருச்சியில் நாளை தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
திருச்சியில் நாளை தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் அதன் தலைவர் அருள்ஜோஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கை குழு) திருச்சி மாவட்ட பேரவை கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு புத்தூர் டாக்டர் மதுரம் ஹாலில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பி. அருள்ஜோஸ் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்றோர் நலன் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதால் சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி ப. அருள்ஜோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.