தமிழக ஆளுனர் ஆர்.என். ரவிக்கு திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு
தமிழக ஆளுனர் ஆர்.என். ரவிக்கு திருச்சி விமான நிலையத்தில் மேயர் அன்பழகன் வரவேற்பு அளித்தார்.;
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (18.08.2022) சென்னையிலிருந்து நாகப்பட்டினத்துக்குச் செல்வதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். அப்போது மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனும் உடன் இருந்தார்.