தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வித்துறை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வித்துறை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வித்துறை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி கல்வித்துறை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. இக்கூட்டத்தில் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கானபல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அப்போது பணியாளர்கள் தாங்கள் ஒவ்வொரு கல்லூரியிலும் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறி அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசினார்கள்.
இதில் இடமாறுதல் கலந்தாய்வு, உரிய காலத்தில் பதவி உயர்வு, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிர்வாக பணியிடம் உருவாக்குதல் என்பது உட்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்கள் அனைத்தும் கல்லூரி கல்வி இயக்குநர், உயர் கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வி செயலாளர் அவர்களுக்கும் சமர்ப்பிக்கப்படும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் கரீம், இணை ஒருங்கிணைப்பாளர் தியாகு, பொருளாளர் கனகசபாபதி, திருச்சி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி உட்பட பல்வேறு மண்டல, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.