தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு அளித்து உள்ளது.
தமிழ் நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்து உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் ரூ. 42 ஆயிரம் கோடிக்கு விவசாய திட்டங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பட்ஜெட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக சட்டப் பேரவையில் தமிழ் நாடு வேளாண்மைதுறை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் அவா்களால் 4−வது முறையாக வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .இதில் கடந்த காலத்தில் ரசாயனஉரங்களை கொட்டி மண்உயிா் இழந்து வரும் நிலையில் மண்ணுயிா் காத்து மண்ணுயிா் காப்போம் திட்டத்தின் இயற்கை விவசாயத்திற்கு ஊக்கம் தரும் வகையில்2−லட்சம் ஏக்காில் பசுந்தாள் சாகுபடிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, மண்புழு உரம் தயாாிக்க படுக்கைகள் வழங்குவது ,பூச்சி விரட்டி செடிகளான ஆடாதொடா,நொச்சி செடிகள் வளா்க்க ஊக்கம் அளித்து இருப்பது ,பாரம்பாிய நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை அறிவித்து இருப்பதும் வரவேற்க தக்கது.
127−லட்சம் மெட்ரிக்டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிா்ணயித்து இருப்பது,சிறு தானியங்கள் உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பது,முக்கணிகளான மா,வாழை,பலா உற்பத்தியை கூடுதல்படுத்த கொடுத்துள்ள அறிவிப்புகள்,கரும்பு ,பருத்தி,பருப்பு வகைகள், மலா்கள் என அனைத்து வேளாண் பயிா்களையும் கணக்கில் எடுத்து திட்டங்களை அறிவித்து இருப்பதும்,அதனை சந்தை படுத்தவும்,நல்ல விலை கிடைக்கவும் ரூ.60−கோடி மதிப்பில் வா்த்தக மையங்கள் அமைக்கப்படும் என்பதும்,படித்த பட்டதாாி இளைஞா்களை விவசாயத்திற்க்கு கொண்டுவர அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்,கொடிவகை காய்களுக்கு பந்தல் அமைக்க மானியங்கள்,பவா்டில்லா் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியம்,மலையோர பகுதிகளில் காட்டு மிருகங்களிடம் இருந்து வேளாண் பயிா்களையும் ,மனித உயிா்களை பாதுகாக்க 75−மீட்டா் சூாிய மின்சக்தி வேலி அமைப்பது,காவிாி அதன் கிளை ஆறுகள் ,வாய்க்கால்களை தூா் வாரரூ.110−கோடி ஒதுக்கீடு செய்துள்ளது போன்ற பெரும்பாலான அறிவிப்புகளை தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சாா்பாக வரவேற்கிறோம்.
எதிா் பாா்த்ததில் சத்தியமங்கலம் செவ்வாழைக்கும்,கொல்லிமலை மிளகு உள்ளிட்டவைகளுக்கு தனி குறியீடு எண் பெற்றுதர நடவடிக்கை எடுப்பது போல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயத்திற்க்கு தனி வா்த்தக குறியீடு எண் பெற்று தர வேண்டும்,தமிழகத்தில் வாழை உற்பத்தி அதிகம் உள்ள நிலையில் அத் தொழிலை பாதுகாக்கும் வகையில் திருச்சியை ஏற்றுமதி மண்டலமாக அறிவிப்பு செய்ய வேண்டும் ,தோ்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளது போல் நெல் குவிண்டால் 1−க்கு ரூ,2500,கரும்பு டன்1−க்கு ரூ,4000−கிடைக்க வழிவகை செய்து இருந்தால் மிக சிறப்பு வாய்ந்த பட்ஜெட்டாக அமைந்து இருக்கும். அறிவிப்பு செய்துள்ள திட்டங்களை தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் முழு மனதோடு வரவேற்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.