கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கான அமைப்பு நிலை பயிற்சி முகாம்

தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கான அமைப்பு நிலை பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெற்றது.

Update: 2024-06-23 14:20 GMT

திருச்சியில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கான அமைப்பு நிலை பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஏஜடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட குழு சார்பில் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான அமைப்பு நிலை பயிற்சி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புத்தூர்  முகூர்த்தம் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முருகன் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைத்தலைவர் எம். செல்வராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில துணை பொதுச்செயலாளரும், பயிற்சி ஆசிரியருமான முனுசாமி  ஆசிரியராக இருந்து உரையாற்றினார். முகாமில் மாநில துணைத்தலைவரும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான க சுரேஷ், மாநில செயலாளர் தோழர் பாலன் ஆகியோரும் பேசினார்கள்.

முகாமில் மாவட்ட நிர்வாகிகள் பழனியப்பன், மருதாம்பாள் ,முத்தழகு, முத்துலெட்சுமி, இருதயசாமி ,வீராசாமி ,துரைராஜ் மற்றும் சுரேஷ்முத்துசாமி ரஜியாபேகம் ,பழனியம்மாள் ,சங்கரதாஸ், சுரேஷ் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கட்டுமான தொழிலாள நல வாரிய கூட்டத்தில் முடிவு செய்தபடி ரூபாய் 2000 என்கிற ஓய்வூதியத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்

சொந்த வீடற்ற கட்டட தொழிலாளர்களுக்கு நலவாரியத்தில் இருந்து ரூபாய் 4 லட்சம் வழங்கும் திட்டத்தை வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் கிடைக்கச்செய்வதோடு ஏற்கனவே அறிவித்த இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெண் கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வூதிய வயது 55 ஆக நிர்ணயிக்க வேண்டும்

தொழிலாளர்களுக்கு தொழிலாளர் குடும்பத்திற்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

மாநிலத்தின் உரிமைகளை பறிக்கின்ற தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தை பறிக்கும் ஒன்றிய அரசின் 2020 ஆண்டின் சமுக பாதுகாப்பு திட்டம் கைவிட தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக  சுமதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News