திருச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்
திருச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் நான்கு பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்;
திருச்சி மாநகரில் போலீஸ் உதவி ஆய்வாளர்கள் 4 பேர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுசிலா, அரியமங்கலம் காவல் நிலையத்துக்கும், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அன்னம்மாள் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், அவருக்கு பதிலாக காவல் உதவி ஆய்வாளர் புவனேஸ்வரியும், எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர் கோபால் மாநகர காவல்துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்