திருச்சியில் விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பள்ளிக்கு சென்ற மாணவிகள்

திருச்சியில் விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Update: 2021-10-29 06:01 GMT

திருச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை  விடப்பட்டதால் மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தென் மேற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திருச்சி மாநகரில் ஏர்போர்ட், டி.வி.எஸ். டோல்கேட், உறையூர், சத்திரம் பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட், பாலக்கரை, கிராப்பட்டி மற்றும் பல்வேறு இடங்களிலும் புறநகர் பகுதிகளான திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் மற்றும் மணப்பாறை உள்ளிட்ட பல இடங்களிலும் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை இன்று காலை ௧௦ தமணி வரை பெய்து கொண்டே இருந்தது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 117 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.சராசரி மழை அளவு 4.98 மில்லி மீட்டர். அதிகபட்சமாக கல்லக்குடியில் 23.40 மில்லி மீட்டர் மழையும் குறைந்த பட்சமாக துறையூர் கொப்பம்பட்டியில் ஒரு மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் கூட மாணவ, மாணவிகள் பலரும் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன்  திரும்பிச் சென்றதை காணமுடிந்தது.

தீபாவளி பண்டிகை வரும் 4-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மழை காரணமாக வாடிக்கையாளர்கள் வராத காரணத்தால் வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாக சாலையோர தரைக்கடை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Similar News