திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய இருவர் கைது
திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பூவாளூர்பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 30). இவர் தனது பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்து கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனிஅருகில் உள்ள டிபன் கடை முன்புநிறுத்தி விட்டு சாப்பிட சென்றுள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவரது பல்சர் பைக்கை காணவில்லை.
இதே போல பீமநகர் மெயின் கண்டித்தெருவை சேர்ந்த சித்திக் அலி (வயது 42) என்பவர் தனது டி.வி.எஸ். அப்பாச்சி மோட்டார் சைக்கிளை கே.கே.நகர் எல்.ஐ.சி.காலனியில் உள்ள டிபன் சென்டர் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அந்த பைக்கையும் காணவில்லை.
இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இது தொடர்பாக பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த முகமது பாகத் (வயது 21). பீமநகர்பண்டரிநாதபுரம் முகமது மன்சூர் (வயது 19) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல்சர் மற்றும் அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு இருவரையும் சிறையில் அடைத்தனர்.