ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

Update: 2024-03-03 15:31 GMT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ராமாநிதி தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பொறுப்பாளர் திருமதி ஹெலன்  வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொதுச் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்தார்.

மாநில நிர்வாகிகள் அன்பரசன் கோவிந்தன், துரைராஜ், பாண்டி மீனா நிர்மலா பரமசிவம், மாநில பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில செயற்குழுவை ஏஐடியுசி திருச்சி மாவட்ட தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார்.

ஏ ஐ.டி யு சி மாவட்டச் செயலாளர் சுரேஷ் வாழ்த்திப் பேசினர். குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படியும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும் பணி பாதுகாப்பு ஈஎஸ்ஐ பி எப் வாரிசு வேலை ஓய்வூதியம், குடும்ப பாதுகாப்பு சுகாதார ஊக்குனர்களுக்கு தனிநபர் கழிப்பறை ஊக்கத் தொகையும் மாதாமாதம் ஊதியம் உறுதி செய்யப்பட்ட தேதியில் ஊதியம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீள பணி வழங்குதல் வெளிமுகமை மூலம் ஊதியம் வழங்க கோரியும்

6.3.2024 ஆம் நாள் அன்று மாநிலம் தழுவிய ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டமும் மகளிர் தினத்திற்கு மார்ச் 8ல் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின கொண்டாட்டமம் நடத்துவது என மாநில செயற்குழு முடிவு செய்தது.

வரும் 11.3.2024 ஆம் நாளன்று மாநில மாநாட்டு கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் கொடுத்து கோரிக்கை நிறைவேற்ற அழுத்தம் கொடுத்து பேசுவது என மாநில செயற்குழு முடிவு செய்தது 27 மாவட்டங்கள் மாநில செயற்குழுவில் கலந்து கொண்டனர். மாநிலத் துணைத் தலைவர் தோழர் பேயத்தேவன்நன்றியுரை வழங்கினார்.

Tags:    

Similar News