மாநில அளவிலான கபாடி போட்டி: முதலிடம் பிடித்த திருச்சி மாநகர காவல் அணிக்கு பாராட்டு
மாநில அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில் திருச்சி மாநகர காவல் கபாடி அணி முதலிடம். கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.;
மாநில அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில் திருச்சி மாநகர காவல் கபாடி அணி முதலிடம்.
புதுக்கோட்டை மாவட்டம், லெட்சுமணப்பட்டியில் கடந்த 3.12.21-ந்தேதி முதல் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் மொத்தம் 40 அணிகள் பங்கேற்றது.
இதில் திருச்சி மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் ரவிசந்திரன் உத்தரவின் பேரில் மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் 12 பேர் கொண்ட கபாடி அணி கலந்து கொண்டும், மொத்தம் 28 சுற்றுகள் கொண்ட தொடரில் இறுதி சுற்றுக்கு முன்னேறி கடந்த 5.12.21-ந்தேதி திருநெல்வேலி மாவட்டம் துர்காம்பிகை கபாடி அணியுடன் மோதியும், திருச்சி மாநகர காவல் கபாடி அணி வெற்றி பெற்று, ரூ.15,000/- மதிப்புள்ள சுழற்கோப்பையும், ரொக்கமாக பணம் ரூ.30,000/- பரிசாக வென்றது.
மேற்படி கபாடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மாநகர காவல் கபாடி அணி வீரர்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், நேரில் அழைத்து வெகுவாக பாரட்டினார்.