திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான செஸ் போட்டி

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

Update: 2022-05-15 11:46 GMT

திருச்சியில் மாநில அளவிலான செஸ் போட்டி துவக்கி வைக்கப்பட்டது.

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் துணை தலைவர் ஏ. கலைச்செல்வன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான செஸ்போட்டி நடந்தது.

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம்,தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் செஸ் சங்கம் செயலாளர் கஸ்தூரி, ரோட்டரி கிளப் வக்கீல் அமலசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் செஸ் சங்கம் பொருளாளர் எடிவின் பால்ராஜ் வரவேற்றார்.

பாவேந்தர் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் & டெக்னாலஜி இயக்குனர் உமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் செஸ் சங்கம் இணைச் செயலாளர் . ஏ. அடைக்கலவன், போட்டியின் தலைமை நடுவர் எம்.பாஸ்கரன், போன்றவர்கள் போட்டியை சிறப்பித்தார்கள் . பயிற்சியாளர் காணிக்கை இருதயராஜ் நன்றி கூறினார். விழாவில் பள்ளி தலைமையாசிரியை கவிதா சுரேஷ், அலெக்ஸ் , கலந்து  கொண்டார்கள்.இந்த போட்டியில் விழுப்புரம், சென்னை மதுரை புதுக்கோட்டை , கள்ளக்குறிச்சி , திருச்சி , நாமக்கல் . ஈரோடு திருவண்ணாமலை போன்ற மாவட்டத்திலிருந்து 30ம் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News