இந்திய விவசாய தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம்

இந்திய விவசாய தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

Update: 2024-01-23 15:31 GMT

இந்திய விவசாய தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்திய தொழிலாளர் விவசாய கூட்டமைப்பின் (ஹெச். எம். கே. பி) மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி காஜாமலையில் உள்ள  மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் கோவிந்தராஜ், மற்றும் ஞானமோகன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தேசிய துணை தலைவர் ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் விளையாடி வேணுகோபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் திருச்சி மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுனர் சங்க தலைவர் சரவணன், இந்திய தொழிலாளர் விவசாய கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தனசேகரன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்திய தொழிலாளர் விவசாய கூட்டமைப்பின் தேசிய தொழிலாளர் வீட்டு வசதி நிறுவனம் மூலம் திருச்சி மாவட்டத்தில் அரசு சார்பில் வீட்டுமனைகள் வழங்கியும் வீடு கட்ட இயலாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டும் பணியை தொடங்குவது. வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வது.

இந்த கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற மார்ச் முதல் வாரத்தில் முக்கொம்பு அணைக்கட்டு பகுதியில் இருந்து வைகை ஆறு அழகன் குளம் வரை இந்திய தொழிலாளர் விவசாய கூட்டமைப்பு சார்பில் வாட்டர் மேன் என போற்றப்படும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சிங் மேத்தா முன்னிலையில் நடைபயணம் மேற்கொள்வது.

மத்திய மாநில அரசுகளின் நலவாரிய அட்டைகள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க எளிமைப்படுத்தப்பட்டாலும் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் ஆன்லைன் மூலமாக செய்திட வழிவகை செய்ய வேண்டும்.

திருச்சி சர்வதேச புதிய பன்னாட்டு விமான நிலையம் மற்றும் திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலை ஆகியவற்றிற்கு முன்னாள் மத்திய ராணுவ மந்திரி  ஜார்ஜ் பெர்னாண்டஸ் பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் திருச்சி மாவட்ட லாரி ஓட்டுனர் சங்க தலைவர் பூமிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News