100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக தபால் தலை சேகரிப்போர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக தபால் தலை சேகரிப்போர் திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
மக்களை தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உறவினர்களுக்கு கடிதம் எழுதி அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
தமிழகத்தில் வருகிற ௧௯ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர தன்னார்வலர்கள் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் மக்களை தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உறவினர்களுக்கு திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் கடிதம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தியா முழுவதும் நடைபெறும் 2024 மக்களை தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்கு பதிவு அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர், தலைவர் லால்குடி விஜயகுமார், செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார், பொருளாளர் தாமோதரன், துணைத்தலைவர் காசிநாத், இணைச் செயலர் கார்த்திகேயன் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன், லட்சுமி நாராயணன் உட்பட பலர்
இந்தியக் குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலை நிறுத்த மக்களவை தேர்தலில் எவ்வித அச்சமின்றியும் மதம், இனம், சாதி, சமூக தாக்கம் இன்றியும் அந்த வாக்கினை எந்தவித அன்பளிப்பும் பெறாமல் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தங்களுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பினர்.