திருச்சி மாநகர காவல் ஆணையர் நடத்திய சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை நடத்தினார்.
திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களுடன் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜி வால் ஆகியோர் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடத்திட வேண்டும் என அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
இந்த உத்தரவின் படி தமிழகத்தில் தற்போது புதன்கிழமை தோறும் மாநகர மற்றும் மாவட்ட தலைநகரங்களில் போலீசார் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று 28 -2-2024-ம் தேதி புதன்கிழமை திருச்சி மாநகரம் கே கே நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 24 மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தீர்வு காண அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் முகாம் முதலமைச்சரின் தனிப்பிரிவு காவல்துறை தலைமை இயக்குனரிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 382 மனுக்கள் பெறப்பட்டு 286 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு மீதமுள்ள 126 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் அளித்த 317 மனுக்களில் 110 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டு மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த தகவலை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாமில் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் சரக உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.