மகாளய அமாவாசையை முன்னிட்டு முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.;

Update: 2023-10-13 15:56 GMT

புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது பித்ரு (முன்னோர்கள்) பரிகார அமாவாசையாக கருதப்படுவதால் முன்னோர்களுக்கு ஆறு மற்றும் கடற்கரை புண்ணிய ஸ்தலங்களுக்கு மக்கள் அதிக அளவில் செல்வார்கள். நமது முன்னோர்கள் பூமிக்கு வரும் நாளாக இது கருதப்படுவதால் அவர்களை திருப்திபடுத்துவதற்காக நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்யப்படுவது உண்டு.

இதன் காரணமாக மகாளய அமாவாசையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் நாளை சனிக்கிழமையும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் பொதுமக்களின் வசதிக்காக 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 

திருச்சி, புதுக்கோட்டை உள்பட 12 ஊர்களில் இருந்து சென்னைக்கு இரு வழி தடங்களில் 150 சிறப்பு பேருந்துகளும் திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் நாகை, வேளாங்கண்ணி ஆகிய அவர்களுக்கு இரு வழித்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன,

கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்பதிவு செய்வதின் மூலம் பயணிகளுக்கு வசதியாகவும் தேவையான பஸ் சேவை அளிக்கவும் ஏதுவாக இருக்கும். எனவே பயணிகளின் எனவே பயணிகள் www.tnstc.inஇணையதளத்தில் முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள் பரிசோதகர்கள், பணியாளர்கள் பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News