திருச்சியில் கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த இருவர் கைது

திருச்சியில் கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த இருவரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-09 08:15 GMT

திருச்சி வயலூர் ரோடு அம்மையப்ப நகரைச் சேர்ந்தவர் ஆதிஷ் (வயது 19).கல்லூரி மாணவர். இவர் தனது நண்பர்களுடன், ஓடத்துறை ரயில்வே கேட் அருகில் போட்டோ சூட் செய்வதற்காக இடத்தை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அங்கு அவர் நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த 4 பேர் கத்தி முனையில் மிரட்டி, அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து ஆதிஷ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பாலக்கரையை சேர்ந்த வினோத்குமார், பீமநகரைச் சேர்ந்த சஞ்சீவி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து செல்போன், பணம் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News