திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தல்: புதுச்சேரியை சேர்ந்த பெண் கைது

திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தல்: புதுச்சேரியை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2023-10-21 08:30 GMT

கோப்புப் படம் - திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் 

திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, விமானத்தில் வந்த ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில், அவரது உள்ளாடையில் மறைத்து வைத்து பேஸ்ட் வடிவில் 909.5 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணையில், அவர் புதுச்சேரியை சேர்ந்த 28 வயதுடைய பெண் என்பது தெரியவந்தது. அவர் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கத்தை கடத்தி வந்ததாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.55 லட்சத்து 7 ஆயிரம் ஆகும்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News