தொடர் ஓட்டம் மூலம் திருச்சி வந்த சிறுவனுக்கு கலெக்டர் சிவராசு வரவேற்பு

விழிப்புணர்வு தொடர் ஓட்டம் மூலம் திருச்சிக்கு வந்த சிறுவனுக்கு கலெக்டர் சிவராசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-10-10 14:15 GMT

கன்னியாகுமரியில் இருந்து தொடர் ஓட்டம் மூலம் திருச்சி வந்த சிறுவனுக்கு கலெக்டர் சிவராசு சால்வை அணிவித்து பாராட்டினார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் பத்து வயது  மாணவர் மாஸ்டர் சர்வேஷ். தரமான கல்வி, நிலையான வளர்ச்சி இலக்குகள் என்ற  ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி  2030-ஆம் ஆண்டுக்குள் இந்தபூமியில் வாழும் அனைத்து மக்களும் பசி, பட்டினியின்றி அமைதியாக வாழ வேண்டும் என்ற உன்னத குறிக்கோளை மையமாக வைத்து   தொடர் ஓட்டத்தை மாஸ்டர் சர்வேஷ் காந்தி ஜெயந்தியன்று கன்னியாகுமரி, காந்தி மண்டபம்,திருவள்ளுவர் சிலை அருகில் தொடங்கினார்.

இன்று (10.10.2021) ஏறக்குறைய 400 கிலோ மீட்டர் ஓடி திருச்சிக்கு வந்தார். இவர் வரும் வழியில்அங்குள்ள காவல் அதிகாரிகள் அவரின், தொடர் ஓட்டம் வெற்றியடைய வாழ்த்து கூறி உற்சாகபடுத்தி வழியனுப்பினார்கள். திருச்சி வந்தடைந்த போது அவரை வரவேற்ற திருச்சி மாவட்டகலெக்டர் சிவராசு மற்றும் திருச்சி மாநகர காவல்துறை துணைஆணையர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாஸ்டர்சர்வேஷின் 750 கிலோ மீட்டர்தொடர் ஓட்டம் வெற்றியடைய  வாழ்த்துக்களை தெரிவித்து,ஊக்கப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி சிவானி கல்விக்குழுமத்தின் தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டு மாணவனின் விடாமுயற்சி தொடர் ஓட்டம் வெற்றியடைய வாழ்த்துகூறினார். மேலும் லயன்ஸ் கிளப்பொறுப்பாளர்கள் பிரசாந்த்,வின்சென்ட், செஞ்சிலுவை சங்கபொறுப்பாளர்கள், மருத்துவர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர்பங்கு பெற்று சர்வேஷின் சாதனையைகூறி வழியனுப்பினர். இதில் சாய்ராம் கல்விகுழுமத்தின் அறங்காவலா்கள்முனுசாமி, பாலசுப்ரமணியன்மற்றும் ஆசிரியர்களும் கலந்து  கொண்டனர்.

Tags:    

Similar News