உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

Update: 2023-10-02 17:01 GMT

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அழகிரி வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நியமனம் செய்வதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளனர்.பின்னர் முதலில் தடையாணை வழங்கப்பட்டு பின்பு 2008 இல் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் மீண்டும் 2008 முதல் 2015 வரை 7 ஆண்டுகள் முன்பு வழங்கியது போல் பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு என்ற முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது .

அதன் பின்னர் 2023 ல்டிவிசன் பெஞ்ச் தீர்ப்பில் அந்த பதவி உயர்வு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் தனி நீதிபதி 2018 தமிழக அரசு வழங்கிய உத்தரவின் பள்ளி கல்வித்துறை 4 7 2018 அன்று மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் சாரநிலை பணிகள் விதி 9 மற்றும் 13 படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் உரிமையை விட்டு தந்த தகுதியின் அடிப்படையில் தொடரும் என்ற பணி விதிகளும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் 23 -3-20234 இட்ட தீர்ப்பு உரிமை துறப்பு மீதான தீர்ப்பு அல்ல என்பதால் 2018 ,19 ,20 ,21 ஆம் ஆண்டுகளில் பணி மாறுதல் வழங்கப்பட்ட உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை தமிழக அரசு பள்ளி கல்வித்துறையும் பரிசீலித்து தற்போது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரியும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமை ஆசிரியர்களாக நீடிக்க ஆவன செய்ய வேண்டும் மாறுதல் மூலம் பணிபுரியும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்யக்கூடாது என்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர்கள் அருள் சுந்தரராஜன், நடராஜன் அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொருளாளர் இளங்கோ, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் திலகநாதன், செயலாளர் பெரியசாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News