திருச்சியில் வேளாண் விளைபொருள் விற்பனை, ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு
திருச்சியில் வேளாண் விளைபொருள் விற்பனை, ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் இணைந்து திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த 500 விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கான ஒருநாள் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கம், புதிய திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்து, ஏற்றுமதி மேம்பாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சரவணன் பேசினார்.
ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை, தோட்டக்கலை துணை இயக்குநர், மாவட்ட வளர்ச்சி மேலாளர், நபார்டு வங்கி மற்றும் முன்னோடி வங்கி மேலாளர், திருச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரையினை ஆற்றினர்.
வாழை ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து தேசிய வாழை ஆராச்சி மையம் இயக்குநர் டாக்டர் செல்வராஜ், எடுத்துரைத்தார்.
தஞ்சை இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப முதல்வர் (பொ) வெங்கடாஜலபதி அனைத்து வேளாண் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி குறித்து சிறப்புரை ஆற்றினார்.
வேளாண்மை விளைபொருட்களுக்கான, ஏற்றுமதி மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து போராசிரியர் செந்தில்குமார், தொழில்நுட்ப உரையாற்றினார். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி மற்றும் நிதிஉதவி திட்டம் குறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையத்திலிருந்து சோபனாகுமார், தொழில்நுட்ப உரையாற்றினார்கள். ஏற்றுமதியாளர் சிவராமகிருஷ்ணன் ஏற்றுமதி இடர்பாடு மற்றும் காப்பீடு சார்ந்த தகவல்களையும் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெறுதல் குறித்தும் தொழில்நுட்ப உரையாற்றினார்கள்.
புதியதொழில்முனைவோருக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து டி.ஏ.பி.ஜ. எப் சரவணன் பேசினார். முடிவில் வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) நாகேஷ்வரி நன்றி கூறினார்.