திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி கோட்டை தெப்பகுளம் பகுதியிலும், காந்தி மார்க்கெட் பகுதியிலும் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்த இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது 7 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அலங்கநாதபுரம் பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்றதாக வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.