திருச்சியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 4,500 கிலோ மாம்பழம் பறிமுதல்
திருச்சியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 4,500 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.;
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள 2 பழக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அந்த கடைகளில் ரசாயன முறையில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 4,500 கிலோ மாம்பழங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை பரிசோதனை செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இது போன்ற செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டால் வயிற்று எரிச்சல் வயிற்றுப் புண் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது புற்றுநோய் கூட ஏற்படலாம் .அதனால் பொதுமக்கள் இதுபோன்ற பழங்களை வாங்கி சாப்பிட வேண்டாம் என மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.