துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 350 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.;
துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை, விமான நிலையத்தில் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரபீக், முகமது கோட்டி, வெள்ளப்பா ஆகிய 3 பேரும் சேர்ந்து மொத்தம் 350 கிராம் தங்கத்தை பேப்பர்களாக தங்களது உடமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.12.50 லட்சமாகும்.