திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல் வைப்பு

திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.;

Update: 2022-09-22 15:38 GMT

திருச்சியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சி கோட்டை, உறையூர் மற்றும் குழுமணி பகுதிகளில் போலீசார் நேற்று சோதனை நடத்தி பெட்டிக்கடை டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர் .இது தொடர்பாக அந்த கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அந்த கடைகளுக்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் சென்று சீல் வைத்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News