திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இலவச மருத்துவமுகாம்
திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.;
திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வரகனேரி கிளை சார்பாக சீனிவாசன் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளாராக மார்க்கெட் காவல் ஆய்வாளர் காந்தி,கோட்டை காவல் உதவி ஆய்வாளர் K. சுப்பிரமணியன் மற்றும் G. சுகுமாரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர்.
மேலும் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் பிச்சைகனி, கிழக்கு தொகுதி தலைவர் தர்ஹா முஸ்தபா,மாவட்ட மருத்துவரணி தலைவர் இக்பால் முகமது , மாவட்ட பொதுசெயலாளர் தமீம் , மாவட்ட செயலாளர் மதர் ஜமால் , கிளை தலைவர் முகமது வாசிக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.