மசூதிக்கு சீல் வைத்ததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மசூதிக்கு சீல் வைத்ததை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-05-18 04:17 GMT

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி திருச்சிதெற்கு_மாவட்டம்சார்பாக மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தெற்கு மாவட்ட துணை தலைவர் பிச்சைக் கனி  வரவேற்புரையாற்றினார்.திருவெறும்பூர் தொகுதி செயலாளர் இமாம்.சாகுல் ஹமீது இன்ஆமி மற்றும் விம் மாவட்ட தலைவர்மூமினா பேகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட தலைவர்.சபியுல்லா, தெற்கு மாவட்ட செயலாளர் ஏர்போர்ட்.மஜீத் தொகுப்புரையாற்றினர்.

இவ்வார்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள்,எஸ்.டி.டி.யு.நிர்வாகிகள், தொகுதி, கிளை,அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.இறுதியாக மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன்  நன்றி கூறினார்.

Tags:    

Similar News