அரிவாள் வெட்டு வழக்கில் தேடப்பட்டவர் திருச்சி கோர்ட்டில் சரண்
அரிவாளால் வெட்டி நகை பறித்த வழக்கில் தேடப்பட்டவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
திருச்சி அருகே உள்ள கல்லணை தோகூர் கிளிக்கூடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் மகன்முகேஷ்குமார் (வயது 27), தனியார் நிதி நிறுவனஊழியர். இவரது நண்பர் அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 38), வெல்டர்.
இருவரும் கடந்த 9-ஆம் தேதி இரவு முத்தரசநல்லூர் அருகே உள்ள கணவனூருக்கு வேலைவிஷயமாக சென்று விட்டுதனித்தனி பைக்கில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் நடு பகுதியில்சென்றபோது பைக்கில் முன்னே சென்ற ரமேஷ்குமார், சாலையை மறித்தபடிசென்ற 4 பேரிடம் ஓரமாக செல்லுமாறு கூறினார். அப்போது 4 பேரும் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் ரமேஷ்குமாரைவெட்டினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதைக்கண்டு பின்னால் பைக்கில் வந்த முகேஷ்குமார், 4 பேரிடம் தகராறில்ஈடுபட்டார். அப்போது முகேஷ்குமாரையும் வெட்டிய மர்ம கும்பல் அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் மற்றும் அவரது பைக்கை பறித்து கொண்டு தப்பினர்.
இந்த வழக்கில் 3 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக இருந்த ஒட்டத்தெருவை சேர்ந்த கிருஷ்ண குமார் (வயது 22) என்பவர் திருச்சி ஜே.எம் 2 நீதி மன்றத்தில்நேற்று சரணடைந்தார். வழக்கைவிசாரித்த மாஜிஸ்திரேட் திரிவேணி, சரணடைந்த கிருஷ்ணகுமாருக்கு நீதிமன்றகாவல் அளித்து உத்தரவிட்டார்.