கோவை பள்ளி மாணவி மரணம் கண்டித்து ஏ.பி.வி..பி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோவை பள்ளி மாணவி மரணம் கண்டித்து ஏ.பி.வி.பி. அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கோவை பள்ளி மாணவி மரணத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி ஏ.பி.வி.பி. திருச்சி மாவட்ட கிளை சார்பில் இன்று மாலை சத்திரம் பஸ் நிலையம் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தென் மாநில செயலாளர் சுசீலா தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.அஸ்வின், தென் தமிழக மாநில செயற்குழு உறுப்பினர் ஹேமா, சூரியா, மாநகர இணை செயலாளர் ஸ்ரீ.சந்தோஷ்குமார் போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.விக்னேஷ்வரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட ,மாநகர பொறுப்பாளர்கள், மாணவத் தலைவர்கள் பலர் கொட்டும் மழையில் கலந்து கொண்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.