திருச்சி உறையூர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் உருவாக்கிய சுகாதார பூங்கா
திருச்சி உறையூர் சாராய பட்டறை தெருவில் தூய்மை பணியாளர்கள் உருவாக்கிய சுகாதார பூங்காவை மாமன்ற உறுப்பினர் சுரேஷ் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி கீழ சாராயப் பட்டறை தெரு பகுதியில் குப்பைகளை வீசி சென்று சுத்தமின்றி இருந்த இடத்தை சுகாதாரப் பூங்காவாக மாற்றி அமைத்து தூய்மை பணியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாம் வீடுகளிலர் பயன்படுத்தி விட்டு தேவையற்ற பொருட்களை சாலையிலோ அல்லது தெருக்களிலோ வீசி விடுகிறோம். இப்படி வீசப்பட்ட பயனற்ற பொருட்களை வடிவமைத்து அழகான சாலையோர தூய்மை பூங்காவாக உருவாக்கி உள்ளனர் திருச்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள்.
திருச்சி மாநகராட்சியின் அனைத்து தெருக்களிலும் வீடுகளுக்கே நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து வருகிறார்கள் தூய்மை பணியாளர்கள். இந்த தூய்மை பணியாளர்களில் படித்தவர்களும் இருக்கிறார்கள். வறுமை காரணமாக அவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக இந்த வேலைகளை செய்து வருகிறார்கள். இவர்களில் கலை ரசனை உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதை தான் அவர்கள் உருவாக்கிய சாலையோர தூய்மை பூங்கா சாட்சியாக அமைந்துள்ளது.
ஏரியா மேனேஜர் நளினி தலைமையிலான தூய்மை பணியாளர்கள் வடிவமைத்த இந்த இடத்தினை மாமன்ற உறுப்பினர் இன்று க. சுரேஷ் திறந்து வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு என் 23 கீழ சாராயப் பட்டறை தெருபகுதியில் குப்பைகளை வீசி சென்று சுத்தமின்றி இருந்த இடத்தை தான் சுகாதாரப் பூங்காவாக மாற்றி அமைத்து எல்லோருடைைய பார்வையையும் தங்கள் பக்கம் திருப்பி இருக்கிறார்கள் இந்த தூய்மை பணியாளர்கள்.
திறப்பு விழா நிகழ்வில் மாநகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், ஆல்பர்ட்,தூய்மைப் பணி மேற்பார்வையாளர் மோகன்ராஜ், ஐந்தாவது மண்டல வேதா நிறுவன ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.