சமயபுரம் எஸ். கண்ணனூர் பேரூராட்சி வார சந்தையில் கலெக்டர் சிவராசு ஆய்வு
சமயபுரம் எஸ். கண்ணனூர் பேரூராட்சி வார சந்தையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு மேற்கொண்டார்.;
திருச்சி மாவட்டம் சமயபுரம் எஸ். கண்ணனூர் பேரூராட்சி சார்பில் வாரச்சந்தை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் அபிவிருத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த இடத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார். வாரச்சந்தை சிறப்பாக நடத்துவதற்கும், சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு செய்ய வேண்டிய வசதிகள் தொடர்பாகவும் அப்போது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் காளியப்பன், மண்டல பொறியாளர் கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.