சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையம் திறப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையத்தை அமைச்சர் நேரு இன்று திறந்து வைத்தார்.;
சமயபுரம மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் முதலுதவி மருத்துவ மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (02.05.2022) தொடங்கி வைத்தார்.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை அளித்திட ஏதுவாகவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இந்த முதலுதவி மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் தினசரிகாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் கல்யாணி, செல்வராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகா;கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.